அறிவுபூர்வமான அரசியல் எழுச்சி: உதயநிதியின் இளைஞர் பட்டாளம்

திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் பேர் இருப்பதாக கூறினார்.
அறிவுபூர்வமான அரசியல் எழுச்சி: உதயநிதியின் இளைஞர் பட்டாளம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இன்று செய்தியாளரிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். அதைப்போல இவருக்கும் வருகிறது, திமுகவிற்கு வரும் கூட்டம் ஒரு அறிவுபூர்வமான கூட்டம் நில் என்றால் நிற்பார்கள் பேச்சை கேள் என்றால் கேட்பார்கள் போ என்றால் போவார்கள். ஆனால் அங்கு அப்படி இல்லை தர்பூசணி பழத்தை தூக்கி அவர் பிரச்சார வாகனத்தில் போடுகிறார்கள். ஒரு சட்டமன்ற வேட்பாளர் நாங்கள் 2034 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்.

எங்கள் கூட்டம் ஒரு அறிவுபூர்வமான இளைஞர்கள் கொண்டது. திமுகவில் உதயநிதி அவர்களை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். இந்த கூட்டம் வாக்கு போடும் எண்ணத்தோடு கூடுகிற கூட்டம். ஆனால் அங்கு வரும் கூட்டம் பார்க்க வரும் கூட்டம். வாக்களிக்க வருபவர்கள் சேருகின்ற கூட்டத்திற்கும் பார்க்க வருகின்ற கூட்டத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் கூறினார். உதயநிதிக்கு வருகின்ற கூட்டம் ஏற்கனவே கருத்தரங்களில் கலந்து கொண்டவர்கள்.

திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறினார். 234 தொகுதியிலும் இனம்,மொழி மற்றும் பண்பாடு கலாச்சாரம் தொடர்பான கருத்தரங்களை உதயநிதி நடத்தியுள்ளார். மேலும் பாசறை கூட்டம் நடத்தி இருப்பதாகவும். 100 பேச்சாளர்களை உருவாக்கியுள்ளார். முதல்-அமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த ஒரு வருட காலத்தில் மற்றும் இளைய சமுதாயத்தை சேர்ந்த 182 பேச்சாளர்களை உருவாக்கியுள்ளார்.

இது அறிவுபூர்வமாக வளர்ந்து வரும் கூட்டம் அவர் அப்படி இல்லை என்பது தான் வருத்தம். இதை போன்று அனைத்து கட்சிகளிலும் இளைஞர் அமைப்பு இருக்கிறது. அந்த இளைஞர் அறிவுபூர்வமாக வளர்த்து எடுப்பது தான் அனைவரின் விருப்பம். அவரும் அதை போல வளர்த்து எடுத்து வந்தால் நல்லது எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com