விலையில்லா சைக்கிள்களுக்கு உதிரி பாகங்கள் பொருத்தும் பணி தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா சைக்கிள்களுக்கு உதிரி பாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விலையில்லா சைக்கிள்களுக்கு உதிரி பாகங்கள் பொருத்தும் பணி தீவிரம்
Published on

தமிழக அரசால் ஆண்டுதோறும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 7,500 சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை ஆங்காங்கே உள்ள பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொருத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

4500 சைக்கிள்கள்

இதில் கடலூர் மாநகரை பொறுத்த வரையில் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களுக்கு உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4500 சைக்கிள்களுக்கு உதிரி பாகங்கள் முழுமையாக பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com