புளியரை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு: வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பு

தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 90 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
கிருமிநாசினி தெளிப்பு
Published on: 

தென்காசி,

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரித்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கின்றனர்.

பறவைக் காய்ச்சல் எதிரொலி

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளம் மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் (எச்.5 என்.1) பறவைகாய்சசல் பரவி இருப்பதை போபாலில் உள்ள நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளதாக தவகவல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத் தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கடந்த 20-ந்தேதி முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டை, கோழி எச்சங்கள், கோழி தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கேரளாவிற்கு கோழி மற்றும் முட்டைகளை இறக்கி விட்டு திரும்பும் காலி வாகனங்களுக்கு முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

2 குழுக்கள்

கேரளாவில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவைக் காய்ச் சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில் கிருமி நாசினி மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் கொண்ட குழுவினர் மூலம் 24 மணி நேரமும் இரவு பகல் பணிகளாகப் பிரித்து 2 குழுக்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையானது தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 90 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்கைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் விழிப்புணர்வு மற்றும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X