குண்டூசியை விழுங்கிய மாணவனுக்கு தீவிர சிகிச்சை

ஓசூர் அருகே குண்டூசியை விழுங்கிய மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குண்டூசியை விழுங்கிய மாணவனுக்கு தீவிர சிகிச்சை
Published on

ஓசூர்

ஓசூர் அருகே மோரனப்பள்ளி பகுதியை சேர்ந்த மாணவன் எல்லேஷ் (வயது12). அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் நேற்று குண்டூசியை விழுங்கி தண்ணீர் குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தபோது, வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com