

மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘ஸ்வீப்பிங் ஆபரேஷன்' என்ற பெயரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் மோப்ப நாய்களின் உதவி யுடன் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கார்களில் கொண்டு வரப்படும் பொருட்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.