பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடந்தது.
பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி
Published on

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடந்தது.

கைப்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம், ஜிம்கானா கிளப் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் மாவட்டம் முழுவதும் இருந்து 34 அணிகளும், மாணவிகள் பிரிவில் 22 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் 14, 17, 19 வயது ஆகிய 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன.

இதில் மாணவிகளுக்கான 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் செயின்ட் மேரிஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி 2-வது இடமும் பிடித்தன.

மாணவர்கள்

மாணவர்களுக்கான 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தையும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளி அணி முதல் இடமும், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடமும் பிடித்தன.

பரிசு

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா ஜிம்கானா கிளப்பில் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக உறுப்பினர் மங்களா ஜெயபால் வரவேற்று பேசினார். அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் பாலமுருகன், ஜிம்கானா கிளப் செயலாளர் பின்டோ வில்லவராயர், பொருளாளர் நார்டன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். முடிவில் உதவி தலைவர் குருசாமி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் செயின்ட் ரவிராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com