இடைக்கால பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்- சபாநாயகர் அப்பாவு

"வருகிற 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இடைக்கால பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்- சபாநாயகர் அப்பாவு
Published on

இதுகுறித்து அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 17-ந் தேதி தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய பட்ஜெட் ஆக இருக்கும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்காக ரூ.1,000, 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விடியல் பயணத்தில் தினமும் 57 லட்சம் பேரும், மக்களைத் தேடி மருத்துவத்தில் 2 கோடியே 58 லட்சம் பேரும் பயன்பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் தி.மு.க. தலைவருக்காக தேர்தல் பணியாற்ற தயாராக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல் அமைச்சர் ஆவார்."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com