அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு நடந்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு
Published on

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் 2022 என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது. மத்திய அரசின் அறிவியல் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேதி பொறியாளர் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு பொறியியல் புல முதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக. வேதி பொறியியல் துறை தலைவர் தனசேகர் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) சீத்தாராமன் வாழ்த்தி பேசினார். மும்பை இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ ஜி.டி.யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்திய வேதி பொறியாளர் கழக தலைவர் டி.எம்.புடாலா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக மாநாட்டு மலரை துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் வெளியிட்டார்.மாநாட்டில் எத்தியோபியா, துருக்கி மற்றும் ஓமன் நாட்டில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பலர் இணையவழியில் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் இந்தியாவின் 6 மாநிலங்களை சேர்ந்த 36 கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ராஜசிம்மன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோபாலகிருஷ்ணன், மணிவண்ணன், பழனிராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com