நெல்லை மாநகரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

நெல்லை மாநகர போலீசார், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் காவல் துறையினர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மாநகர போலீஸ் அதிகாரிகள் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி அவர்களை உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
Related Tags :
Next Story






