திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
Published on

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2025) திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்க பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com