சர்வதேச மகளிர் தினம்: கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராகப் பதவியேற்பதற்கு, அதிமுக மகளிர் அணியினர் நல்வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
சர்வதேச மகளிர் தினம்: கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
Published on

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான `புரட்சித் தமிழர்’ எடப்பாடி மு.பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (4.3.2026 – புதன்கிழமை), சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள் உள்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் வந்திருந்த, கழக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும், நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் வெற்றி பெற்று, மீண்டும் முதல்-அமைச்சராகப் பதவியேற்பதற்கு, தங்களது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com