மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்; மின் நுகர்வோர்கள் பாதிப்பு

மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம் மின் நுகர்வோர்கள் பாதிப்படைந்தனர்.
மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்; மின் நுகர்வோர்கள் பாதிப்பு
Published on

மீஞ்சூரில் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்தின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. மீஞ்சூர் பகுதியில் உள்ள கம்பெனிகள், நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களுக்கு இந்த மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள், மின் கட்டணங்கள், இதர சேவை செய்து வருகின்றது. மின்வாரிய ஊழியர்கள் மின்மீட்டரில் இருந்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் மின் கட்டணம் நேரடியாக மீஞ்சூர் அலுவலகத்தில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டண இணையதள சேவை கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்டது. இதனால் மின்வாரிய அலுவலகம் பணி மற்றும் மின்கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர் உரிய கால கெடுக்குள் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் தண்டனைத் தொகை செலுத்தி நேரிடும் என்பதால் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com