விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 17, 18-ந்தேதிகளில் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் விசாரணை

நெல்லையில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். கடந்த 10-ந்தேதி முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 17, 18-ந்தேதிகளில் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் விசாரணை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து அமுதா ஐ.ஏ.எஸ். கடந்த 10-ந்தேதி நெல்லையில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வரும் 17, 18 ஆகிய தேதிகளில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். இரண்டாம் கட்ட விசாரணையை நடத்த உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ புகார் தெரிவிகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 8248887233 என்ற பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com