தி.மு.க. மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.
தி.மு.க. மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்
Published on

தி.மு.க.வில் உட்கட்சி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் முன்னிலையில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள். நேர்காணலை தொடர்ந்து புதிய மகளிரணி நிர்வாகிகள் கட்சி தலைமை அறிவிக்க உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com