அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு வரும் 9 ஆம் தேதி நேர்காணல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நேர்காணல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு வரும் 9 ஆம் தேதி நேர்காணல்
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 160 பேரில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு இறுதி செய்தது. இந்த 10 பேருக்கும் வருகின்ற 9 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது, நிதி தேவைகளை ஈடுகட்டுவது உள்ளிட்டவை பற்றி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 10 பேரில் இருந்து தகுதியான 3 பேரை தேர்வு செய்து, தேடல் குழு கவர்னரிடம் சமர்ப்பிக்கும். இறுதியாக 3 பேரில் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com