அண்ணாமலை குற்றசாட்டு குறித்துஉண்மையை அறிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்

அண்ணாமலை குற்றசாட்டு குறித்து உண்மையை அறிய மக்கள் எதிர்பார்க்கின்றனர் என ஜி.கே.வாசன் கூறினார்.
அண்ணாமலை குற்றசாட்டு குறித்துஉண்மையை அறிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்
Published on

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள், முதல்-அமைச்சர், உறவினர்கள் ஆகியோரின் சொத்து விவரம் குறித்து ஒரு பட்டியல் வெளியிட்டு உள்ளார்.

இதை ஆளும் கட்சி அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது. அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு உண்மைதானா? என அறிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். பட்டாசு ஆலைகள் வெடி விபத்து தொடர்பாக பாதுகாப்பு கருதி அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவே இல்லை. வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை அடைப்போம் என்று கூறினார்.

ஆனால் இன்றுவரை அது நடைபெறவில்லை. வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின், மது போதையில் இளைஞர்கள் வழிமாறி செல்கின்றனர். மீண்டும் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com