

சென்னை,
விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
விஜய்யை நாங்கள் இதுவரை நேரில் பார்த்தது இல்லை. அவரை முதல் முறையாக பார்த்து பூரித்துபோனோம். அரசியலில் விஜய் நிறைய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக இலவசங்களை பற்றிய அறிவிப்புகள் இல்லாமல் அவர் அரசியல் செய்ய வேண்டும். எங்கள் பணத்தையே எடுத்து எங்களிடம் கொடுக்கிறார்கள். அந்த அரசியல் தேவை இல்லை. வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்தி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளார்.
அதேபோல் ஜெயலலிதாவாவும் நடிகையாக இருந்ததுதான் அரசியலுக்கு வந்து சாதித்தார். அதேபோல விஜய்யும் நடிகராக இருந்த அரசியலுக்கு வருவதில் தவறில்லை. இதுவரை விஜய்யை நடிகராக பார்த்தோம். இனி தலைவராக பார்க்க போகிறோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதநிலை உள்ளது. பெண்களுக்கு எதிரான சம்பவங்கல் நிறைய நடக்கிறது. எனவே விஜய் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். முதல் நடவடிக்கையாக விஜய் இதை செய்ய வேண்டும்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில்,
அவர் வளர்ச்சிய பாத்து எல்லாருக்கும் பொறாமை. விஜய் வரக்கூடாதுன்னு நிறைய சதி பண்றாங்க..ஆனா நிச்சயமா அவர் தான் ஆட்சிக்கு வருவாரு என்றார்.
அவர் மக்களுக்கு செய்வாருன்னு நம்பிக்கை இருக்கு. பெண்கள் சப்போர்ட் புல்லா அவருக்கு தான். 2026 அவர் தான் சி.எம்.
இதுவர எங்க கிராமத்துக்கு எந்த நல்லதும் நடக்கல.. விஜய் அண்ணா வந்தா எல்லாமே நடக்கும்னு நம்புறோம்.. த.வெ.க பெண் தொண்டர் ஒருவர் கூறினார்.
இவ்ளோ ரிஸ்க் எடுத்து விஜய்யை பாக்க வரவங்க ரிஸ்கே இல்லாம ஒரு பட்டனை அழுத்த மாட்டாங்களா?..நிச்சயமாக வரும் தேர்தலில் விஜய் ஜெயிப்பார் என பெண் தொண்டர் ஒருவர் உற்சாகமாக கூறினார்.