குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு நேபாள காவலாளி கைது

சென்னை தியாகராயநகர் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி இளம்பெண்ணை கற்பழித்த நேபாள காவலாளி கைது செய்யப்பட்டார்.
குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு நேபாள காவலாளி கைது
Published on

சென்னை,

சென்னை தியாகராயநகர் தென்மேற்கு போக் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் காவலாளியாக வேலை செய்கிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் பகலில் அடுக்குமாடி குடியிருப்பிலும், இரவில் தனியார் நிறுவனம் ஒன்றிலும் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் சாந்தி (வயது 24-பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சங்கர், தான் வேலைபார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே சிறிய அறை ஒன்றில் தனது குடும்பத்தோடு வசித்துவந்தார். இவர்களது இல்லற வாழ்க்கையில் அவரது உறவினரான நேபாள நாட்டைச் சேர்ந்த வினோத் (24) என்ற வாலிபர் குறுக்கிட்டு புயலை கிளப்பிவிட்டார்.

வினோத், சங்கர் வசிக்கும் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்தார். உறவினர் என்ற முறையில், சங்கரின் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது சங்கரின் மனைவி சாந்தி மீது அவருக்கு மோகம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவு வினோத், தான் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் உட்கார்ந்து தனது நண்பர்கள் அருண்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோரோடு மது அருந்தினார். போதை மயக்கத்தில் அருண்குமாரும், ஜெயச்சந்திரனும் மொட்டை மாடியிலேயே படுத்துவிட்டார்கள். ஆனால் வினோத்திற்கு அப்போது விபரீத ஆசை ஏற்பட்டது.

வீட்டில் தனியாக குழந்தைகளோடு தூங்கிய சாந்தியை அனுபவிக்க துடித்தார். பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுவர் ஏறி குதித்து சாந்தி தூங்கிய அறைக்கு சென்று கதவை தட்டினார். தனது கணவர் தான் கதவை தட்டுகிறார் என்று நினைத்து சாந்தி கதவை திறந்தார். வெளியில் வெறியோடு நின்றிருந்த வினோத் சாந்தியை கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி சத்தம்போட்டார்.

சத்தம் போட்டால் உன் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என்று வினோத் மிரட்டினார். ஒரு குழந்தையின் கழுத்தில் காலை வைத்து சத்தம்போட்டால் காலால் மிதித்து கொன்றுவிடுவேன் என்று பயம் காட்டினார். இதனால் பயந்துபோன சாந்தி, என் குழந்தையை ஒன்றும் செய்துவிடாதே என்று பதறினார்.

இதை பயன்படுத்தி சாந்தியை வினோத் கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். அவர் போனபிறகு சாந்தி கூச்சல் போட்டபடியே வெளியில் வந்தார். அவரது கணவர் சங்கருக்கும் செல்போனில் தகவல் கொடுத்தார். சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மகாலிங்கம், ஸ்டாலின் ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் சாந்தியிடம் விசாரணை நடத்தினார்கள். உடனடியாக தப்பிச்சென்ற வினோத்தையும், அவரது நண்பர்கள் அருண்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோரையும் மடக்கிப்பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாந்தியின் கணவர் மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். அவரது நண்பர்கள் இருவரிடமும் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com