மதுபோதையில் தாக்குதல் - பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Intoxicated assault - Police register case against singer Mano's sons
Published on

சென்னை,

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனையடுத்து, பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாஹீர், ரபிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com