காலதாமதமின்றி பணிகளை விரைவுப்படுத்த மின்சார கட்டணத்தை மாற்ற ஆன்-லைன் வசதி அறிமுகம்

காலதாமதமின்றி பணிகளை விரைவுப்படுத்த மின்சார கட்டணத்தை மாற்ற ஆன்-லைன் வசதி அறிமுகம் வாரியம் அதிரடி நடவடிக்கை.
காலதாமதமின்றி பணிகளை விரைவுப்படுத்த மின்சார கட்டணத்தை மாற்ற ஆன்-லைன் வசதி அறிமுகம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய இணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது.

இதில் வீட்டு இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவது உள்ளிட்ட கட்டண விகிதங்களை மாற்றுவதற்கும் தற்போது ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் விவசாய மின்சார இணைப்பு தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர்கள் இணைப்புகள் தொடர்பான கட்டண மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்காக எளிதாகவும், காலதாமதமின்றி விரைவாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. மின்சார நுகர்வோர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சென்று அதில் தங்கள் விண்ணப்பத்துடன், ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்வதுடன், தேர்வு செய்துள்ள கட்டண விவரம், இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்ணை மட்டும் அனுப்பினால் போதும். வேறு எந்தவித ஆவணங்களும் அனுப்ப தேவையில்லை. காலதாமதமின்றி உரிய பரிசீலனைக்கு பின்னர் விரைவான சேவை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com