கரூரில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பு

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் சென்றதால் கரூர் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
கரூரில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பு
Published on

கூட்டம் அலைமோதல்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தொழில் மற்றும் பல்வேறு காரணங்களால் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்த்த பலர் கரூர் மாவட்டத்திற்கு கடந்த 14-ந்தேதியில் இருந்து வர தொடங்கினர். இதையடுத்து பொங்கல் பண்டிகையை தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் உற்சமாக கொண்டாடினார். இதையடுத்து தங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்ல நேற்று ஆயத்தமாகினர்.இதனால் நேற்று கரூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வேலைபார்க்கும் ஊர்களுக்கு செல்ல கரூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் தங்கள் செல்லும் ஊர்களின் பஸ்களை பிடித்து சென்றனர்.

இதனால் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காணப்பட்டன. இதனால் கரூர் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், அவ்வபோது போக்குவரத்து அதிகாரிகள் எந்தெந்த பஸ்கள் எங்கு செல்கிறது. பொதுமக்கள் எங்கு நின்று பஸ்களில் ஏற வேண்டும் என அறிவுறுத்தியபடி இருந்தனர்.

ராந்து பணி

கரூர் ரெயில்நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று பணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்று காண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com