75 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையுடன் இயங்கும் விஜய் ராஜா குழுமத்திற்கு ரூ.80 கோடி முதலீடு

கடந்த 12 ஆண்டுகளில், விஜய் ராஜா ஹோம்ஸ் 986 வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது

75 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையுடன் இயங்கும் விஜய் ராஜா குழுமத்திற்கு  ரூ.80 கோடி முதலீடு
Published on

சென்னை,

சென்னையில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த வளர்ச்சியை கவனித்து நிதி நிறுவனங்களும் இந்த துறையில் முதலீடு செய்ய முன்வருகின்றன. வீடுகளுக்கான தொடர்ந்த தேவை, நேரத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் நம்பகமான டெவலப்பர்கள் ஆகியவை, ரியல் எஸ்டேட்டை ஒரு வலுவான முதலீட்டு துறையாக மாற்றியுள்ளது.இந்த நம்பிக்கையின் அடிப்படையில், சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், சென்னையை மையமாகக் கொண்ட விஜய் ராஜா ஹோம்ஸில் ₹80 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு, தனியார் முறையில் வெளியிடப்பட்ட Non-Convertible Debentures (NCDs) மூலம், சுந்தரம் ஆல்டர்நேட்ஸ் – Real estate performing credit fund – சீரிஸ் 5 வழியாக செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில், விஜய் ராஜா ஹோம்ஸ் 986 வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம், தரம் மற்றும் நம்பகத்தன்மை என்ற பெயரை நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது VRX என்ற புதிய அடையாளத்துடன், ஸ்மார்ட் ஹோம் கம்யூனிட்டி டெவலப்பராக நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.2026 ஆம் ஆண்டில் மேலும் 967 வீடுகளை வழங்க திட்டமிட்டுள்ள VRX, இதுவரை உருவாக்கிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நீண்டகால மதிப்பு கொண்ட முதலீடுகள் இந்த வளர்ச்சி பயணத்தின் மையமாக உள்ளன.

இந்த முதலீடு குறித்து விஜய் ராஜா ஹோம்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர், திரு. அஷ்வின் செந்தில்நாதன் கூறுகையில்,“ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை நம்பி, சுந்தரம் ஆல்டர்நேட்ஸ் போன்ற நிதி நிறுவனம் எங்களிடம் முதலீடு செய்திருப்பது, எங்கள் செயல்பாடுகள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்த நிதி ஆதரவு, திட்டங்களை வேகமாக நிறைவேற்றவும், தரமான கட்டுமானத்துடன் மதிப்பு சேர்க்கும் சமூகங்களை உருவாக்கவும் உதவும்” என்றார்.

இந்த முதலீட்டின் மூலம், VRX கட்டுமான வேகத்தை உயர்த்தி, புதிய திட்டங்களை சந்தைக்கு கொண்டு வரும். தரம் மற்றும் நீண்டகால மதிப்பை மையமாகக் கொண்டு, சென்னையின் குடியிருப்பு சந்தையில் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com