திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

சாதியை ஒழிக்க ஒவ்வொரு அதிகாரியும் முயற்சிக்க வேண்டும் என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் விழா அழைப்பிதழில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறையின் விழாவில் சாதி பெருமையை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஐகோர்ட்டு, சாதியை பெரிதுபடுத்தக் கூடாது என்றும், சாதியை ஒழிக்க ஒவ்வொரு அதிகாரியும் முயற்சிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com