சென்னையில் ஐபிஎல் போட்டிகள்: தள்ளி வைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தாலும் வழக்கம் போல ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தள்ளிவைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்? ஐபிஎல் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சினை? என ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் வழக்கு எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com