ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், சீமா அகர்வால் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமாஅகர்வால், டி.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், சீமா அகர்வால் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
Published on

சென்னை,

ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் அவர் தற்போது வகிக்கும் காவலர் வீட்டு வசதி கழகத்தின் கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்து, டி.ஜி.பி.யாக பதவி மாற்றம் செய்யப்பட்டார்.அதுபோல ஆபாஷ்குமார் தற்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பில் உள்ளார். அவர் இனிமேல் சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றுவார்.

டி.வி.ரவிச்சந்திரன் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் மத்திய அரசு பணியில் உள்ளார். அவர் இனிமேல் மத்திய அரசு பணியில் டி.ஜி.பி. அந்தஸ்தில் செயல்படுவார்.

டி.ஜி.பி.யாக...

சீமாஅகர்வால் சீருடை பணியாளர் தேர்வாணயத்தில், கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கிறார். இனிமேல் அவர் அதே பணியில் டி.ஜி.பி.யாக இருப்பார்.

இவர்கள் தவிர 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி மாற்றமும், 2 அதிகாரிகளுக்கு கூடுதல் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமையக கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வெங்கட்ராமன், தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

தொழில் நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ்பூஜாரி, சைபர் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

கூடுதல் பொறுப்பு

மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. வினித்தேவ் வான்கடே தொழில் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.

மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவியையும், தனது பொறுப்பில் வைத்துக்கொள்வார்.சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு ஐ.ஜி.யான கபில்குமார் சி.சரத்கர் விடுமுறையில் சென்றிருந்தார். பணிக்கு திரும்பிய இவர் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com