ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் : தங்கம் விலை உச்சம் ; ரூபாய் மதிப்பு சரிவு

ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றத்தால் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து உள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் : தங்கம் விலை உச்சம் ; ரூபாய் மதிப்பு சரிவு
Published on

சென்னை

ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.64 உயர்ந்து ரூ.3,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளிகள் சரிந்த நிலையில், 41 ஆயிரத்து 97 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. முற்பகல் 11.30 மணியளவில், சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகமானது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், 155 புள்ளிகள் சரிந்து, 12 ஆயிரத்து 70 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதுதவிர, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நேற்றைய மதிப்பை விட, இன்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com