இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது

ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் இரிடியம் விற்று பணம் பெற்று தருவதாக கூறி பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது.
இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது
Published on

ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் இரிடியம் விற்று பணம் பெற்று தருவதாக கூறி பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக பீகாரை சேர்ந்த சோனுகுமார்துபே (வயது 29), தெலுங்கானாவை சேர்ந்த ஜார்ஜ் தாம்ஸ்(35) உள்பட 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நாடு முழுவதும் 23 பேரிடம் ரூ.5 கோடியே 65 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com