நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு: கே.என்.நேரு மறுஆய்வு மனு மீது திங்கட்கிழமை தீர்ப்பு

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கே.என்.நேரு கூறியிருந்தார்.
நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு: கே.என்.நேரு மறுஆய்வு மனு மீது திங்கட்கிழமை தீர்ப்பு
Published on: 

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி. க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை இந்த ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) பிறப்பிக்க உள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com