நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனு தள்ளுபடி

கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்று கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு:  தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனு தள்ளுபடி
Published on: 

சென்னை,

நகராட்சித்துறை பணி நியமனத்தில் முறைகேடு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனு தள்ளுபடி

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மறுஆய்வு

இதனை எதிர்த்து தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை இந்த ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மனு தள்ளுபடி

இதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்று கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com