பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த சமூகஆர்வலர் பிரசாந்த் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊராட்சிக்குட்பட்ட ப.வில்லியனூரில் அரசால் வழங்கப்படும் பிரதமரின் ஆவாஸ்யோஜனா இலவச வீடு வழங்கும் திட்டத்தில் ஒரே குடும்பத்தில் முறைகேடாக கணவருக்கு ஒரு வீடும், மனைவிக்கு ஒரு வீடும், மாமனார், மகனுக்கு என்று தனித்தனியாக 2 வீடுகளும் என மொத்தம் 4 வீடுகள், கட்டாமலேயே அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com