"ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா..?" - சென்னை ஐகோர்ட்டு காட்டம்


ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா..? - சென்னை ஐகோர்ட்டு காட்டம்
x
தினத்தந்தி 9 July 2025 1:37 PM IST (Updated: 9 July 2025 3:13 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சென்னை,

சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், மாநகராட்சி ஆணையரின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை கழித்து, அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிட்டபோது, ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்து கொள்கிறாரா..?, எங்கள் அதிகாரத்தை காட்டலாமா? என்று காட்டமாக கூறிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், " வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை படித்துப் பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் அவர் ஆணையராக இருக்கவே தகுதியில்லாதவர்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story