பேரம் பேசுகிறதா தேமுதிக? விஜய பிரபாகரன் ஆவேசம்


பேரம் பேசுகிறதா தேமுதிக? விஜய பிரபாகரன் ஆவேசம்
x
தினத்தந்தி 9 Jan 2026 9:04 PM IST (Updated: 9 Jan 2026 9:08 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் தூண்டிலில் விஜய் சிக்கக்கூடாது என விஜயபிரபாகரன் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாநாட்டில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசியதாவது:-

தேமுதிகவுக்கு என்ன கொள்கை என்று கேட்கின்றனர். ஊழலை ஒழிப்பேன் என்றவர் விஜயகாந்த்.பேரம் பேசுவதாக தேமுதிகவை விமர்சனம் செய்கின்றனர். 2005 முன் விஜயகாந்த் சொத்து என்ன? இப்போது சொத்து என்னவென்று ஓபன் சேலஞ்ச் செய்கிறேன். பேரம், பெட்டி என தேமுதிகவை விமர்சனம் செய்கின்றனர். யாருடா நீங்கள் எல்லாம்?

இளம் தலைவர் பட்டியலில் உதயநிதி,விஜய், அண்ணாமலை, சீமான் பெயரை எல்லாம் போடுகின்றனர். இளம் அரசியல் தலைவர்களின் பட்டியலில் என் பெயரை ஏன் போடவில்லை? ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் அண்ணாவுக்கு எனது சிறிய அறிவுரை. காங்கிரசின் தூண்டில் சிக்கக்கூடாது. தேர்தல் கூட்டணி பேரத்திற்காக விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது.

இன்று என் அம்மா கோவிலில் 2 இடங்களில் சூரைத்தேங்காய் உடைத்தார். இரண்டு இடத்திலும் தேங்காய் இரண்டாக பிளந்துவிட்டது. இதில் இருந்து என்ன தெரிகிறது? 2 பெரிய கட்சிக்கும் தேமுதிகவின் தேவையும், சேவையும் வேண்டும் என்பது தெரிகிறது என்றார்.

1 More update

Next Story