மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் விஸ்வநாதன்

முல்லை பெரியாறில் புதிய அணை கட் டுவோம் எனக்கூறிய கேரள முதல் மந் திரிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்தார்.
அமைச்சர் விஸ்வநாதன்
Published on

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் விஜய்யின் சினிமா பாடல் ஒன்றுக்கு அமைச்சர் விஸ்வநாதன் மேடையில் ஆடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆடினர். தொடர்ந்து அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம், கடுமையாக எதிர்க்கிறோம்.

மேகதாது அணை

சட்டமன்றத்தில் இதற்கென தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகள் தமிழக மக்களுக்கு சாதகமாக உள்ளன. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் கலந்து பேசித்தான் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டும். கர்நாடக முதல்-மந்திரி தன்னிச்சையாக எடுக்கும் முடிவை ஏற்க முடியாது. மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மகத்தான கூட்டணி

இன்னும் கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில்தான் ஆட்சி நடைபெறும். தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ் பேரியக்கம், கூட்டணிக் கட்சிகள் இணைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவோம். கேரள முதல்-மந்திரி, முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறுவதும் ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com