

சென்னை,
தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரத்தில், திமுக கூட்டணிக் கட்சியினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில், பள்ளி மாணவி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக, அந்த மாணவி உயிர் தப்பியுள்ளார்.
அனுமதியின்றி பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தவெக சார்பில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.