தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்? - மா.சுப்பிரமணியன் விளக்கம்

மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியர் தெரிவித்தார்.
சென்னை,
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை. மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமாமன நிலை எதுவும் இல்லை. சுகாதாரமற்ற நீர்நிலைகள் மூலம் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்புதான் உள்ளது. பதற்றம் தேவையில்லை. மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
நல்லக்கண்ணுவுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சுவாசத்தை எளிதாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான்.”
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






