ரெயில்வே தேர்வில் வட மாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்று சொல்வதா? - பா.ஜ.க. கண்டனம்

ரெயில்வே தேர்வில் வட மாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்று சொல்வதா? என்று பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
ரெயில்வே தேர்வில் வட மாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்று சொல்வதா? - பா.ஜ.க. கண்டனம்
Published on

சென்னை,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே தேர்வுகளில் வடமாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது. தகுதி அதிகமாக தேவைப்படும் பணியிடங்களில் அதிக தமிழர்கள் இடம் பெறுகிறார்கள். ஒரு சில பணியிடங்களில் தமிழர்களின் தேர்வு குறைவாக இருப்பதற்கு காரணம், தேவைக்கு அதிகமான தகுதி என்பதையும் உணர்தல் வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் இதை உணர்ந்துகொள்வதோடு, தேவையில்லாத வகையில் மொழி அரசியலை திணித்து உண்மைக்கு மாறான தகவல்களை அவசர கோலத்தில் தெளித்து மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதை நிறுத்தி கொள்வது சிறப்பை தரும்.

தொழிற்கல்வி வேண்டும் என்றால் அதை குலக்கல்வி என்று சொல்பவர்கள், அரசியல் மூலம் மொழியை வளர்க்க தவறியவர்கள், மொழியின் மூலம் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்தி கொள்வது அடுத்த தலைமுறையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் மற்றவர்களை பழித்து, இழித்து மாணவர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் போக்கினை சில தமிழக அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com