மாதம் ரூ.2,500-னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய் கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? - மு.க.ஸ்டாலின்

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது, எனவே மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாதம் ரூ.2,500 என்று சொல்லிவிட்டு, ஆயிரம் ரூபாயை கூட தராமல் இழுத்தடிக்கிறதுதான் உங்கள் மாற்றமா? என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய் கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com