கல்வராயன்மலையில் மீண்டும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? - போலீசார் ஆய்வு

கல்வராயன்மலையில் மீண்டும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என டிரோன் மூலம் 50 போலீசார் ஆய்வு செய்தனர்.
கல்வராயன்மலையில் மீண்டும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? - போலீசார் ஆய்வு
Published on: 

கள்ளக்குறிச்சி,

கள்ளச்சாராய விவகாரம்

கள்ளக்குறிச்சியில் 19.6.2024 இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். ஆம். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கரு ணாபுரம், ஜோகியர் தெரு ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு துயரம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பகுதியில் விற்ற கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்தவர்களில் 70 பேர் உயிரிழந்தனர். 231 பேர் பாதிக் கப்பட்டனர். அந்த பகுதிகளில் பல வீடுகளின் வாயிலில் சடலங்கள் கிடத்தப்பட் டிருந்தன. எங்கு பார்த்தாலும் துயரத்தின் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது.

கல்வராயன்மலையில் சில வியாபாரிகள் சாராயம் காய்ச்சி, அதில் போதையை அதிகரிப்பதற்காக மெத்தனால் கலந்து விற்றதன் விளைவே பல உயிர்களை காவு வாங்கியதற்கான காரணம் என தெரியவந்தது. அதன்பிறகே போலீசார் தங் களது சாட்டையை சுழற்ற தொடங்கினர். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கல்வராயன்மலையில் அதிரடி சாராய வேட்டை நடத்தி, அதை காய்ச்சுவதற்காக பேரல்களில் வைத்திருந்ததை கைப்பற்றி அழித் தனர்.

டிரோன் மூலம் ஆய்வு

இந்தியாவையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பிறகு கல்வராயன்மலையில் அவ்வப்போது போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.அருளரசு தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கல்வராயன்மலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மீண்டும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என டிரோன் மூலம் ஆய்வு செய்தனர். நீரோடை, ஏற்கனவே சாராயம் காய்ச்சிய இடங்களில் போலீசார் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் சாராயம் எதுவும் சிக்க வில்லை. இதுபோன்று தொடர்ந்து ஆய்வு செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.

X