டாஸ்மாக் தனியார்மயமாகிறதா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 40 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல் பட்டு வருகின்றன
அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்
Published on: 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; டாஸ்மாக் தனியார் மயமாக்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று நாங்கள் கூறவில்லை. 2003ல் ஜெயலலிதா எதற்காக தனியார் மதுக்கடைகளை மூடினார் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய முடிவு எடுப்பதற்கான சூழலையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது”என்றார். டாஸ்மாக் கடை ஊழியர்கள் நேற்று திடீரென கடையை மூடி போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சர் விக்னேஷின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் போராட்டம் ஏன்?

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 40 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல் பட்டு வருகின்றன. நேற்று முதல் காலி மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் களுக்கு நிர்வாகம் அறிவித்து இருந்தது.ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மதுபாட்டில்கள் வரை திரும்ப பெறுவதாக இருந்தால் அந்த கடைக்கு ஒரு பணியாளரை நியமித்து அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கும் வகையிலும், 2 ஆயிரம் மதுபாட்டில்களுக்கு மேல் திரும்ப பெறுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் வகையிலும் ஆட்களை நியமித்து கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வா கம் உத்தரவிட்டது. ஆனால், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கான இடவசதி உள்ளிட்டவை முறையாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்காக ஒரு மதுபாட்டிலை 3 தடவை ஸ்கேன் செய்ய வேண்டியது இருப்பதாகவும், இது மது பாட்டில்கள் அதிகம் விற்பனையாகும் கடைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்து வதாகவும் புகார் கூறப்பட்டது.

கடைகள் அடைப்பு

இந்த நடைமுறை சிக்கலை சுட்டிக்காட்டி நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதாவது, பொதுவாக பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். ஆனால், பல இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் பகல் 12 மணிக்கு கடை களை திறக்காமல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் 460 கடைகள் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மேலாளர்கள் அலுவலகம் முன்பு கூடி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் டாஸ்மாக் அலுவலகங்களில் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், இதில் எந்த முடி வும் எட்டப்படவில்லை.

திக்குமுக்காடிய மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத இடங்களில் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திக்குமுக்காடினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட மதுப்பிரியர்கள் அதிகம் பேர் கடைகளின் முன்பு திரண்டிருந்தனர்.

X