பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக் கூடுதல் விலைக்கு கொள்முதலா? உண்மை என்ன?

62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கேக்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

நவம்பர் 14-ஆம் தேதி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டிருந்தது.

கேக் கொள்முதல்

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 4 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதில் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்

உண்மை என்ன ?

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com