செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை? புதிய கோணத்தில் விசாரணை

இன்றுடன் சிறுமி மாயமாகி 13 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை?
Published on: 

விழுப்புரம்,

செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் 2-வது மகள் ஹேமலதா(வயது7). இவர் அந்தபகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி சிறுமி தனது பெற்றோர். உறவி னர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினர். மறுநாள் 12-ந் தேதி அதிகாலை சிறுமி மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து பெற்றோர் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். மேலும் 10 த னிப்படை அமைக்கப்பட்டும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. ஆனாலும் மாயமான சிறுமியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

அவர்கள் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதி வாணன் மற்றும் போலீஸ். அதிகா ரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்களை சத்தியமங்கலம் போலீசார். சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுடைய சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவி னர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்கள் அளித்த பதில்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும் சிறுமி மாயமான வீட்டின் பகுதியை வரைபடமாக வரைந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 3-வது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சி. பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை புதிய கோணத்தில் விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது தற்போது வரை நடத்தப்பட்டவிசாரணையின் அடிப்படையில் மாயமான சிறுமி உயிருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக போலீசார் தெரிவி க்கின்றனர். மேலும் மாயமான சிறுமி விற்க ப்பட்டாரா? என்ற புதிய கோணத்தில் விசா ரணையை தீவிரப்படுத்தி யுள்ளதாகவும், விரைவில் சிறுமி மீட்கப்படுவார் எனவும் போலீசார் தெரிவி க்கின்றனர். இன்றுடன் சிறுமி மாய மாகி 13 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com