பி.எம்.ஸ்ரீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - கி.வீரமணி கண்டனம்

சந்தடி சாக்கில் கந்தக பொடி தூவ நினைக்கிறதா மத்திய பா.ஜனதா அரசு? என கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்..
பி.எம்.ஸ்ரீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - கி.வீரமணி கண்டனம்
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, இன்னும் ஓர் அரசு பொறுப்பேற்காத நிலையில் மத்திய அரசு தனது மும்மொழிக் கொள்கையை திணிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்கச் சொல்லி நெருக்கடி தருவது கண்டிக்கத்தக்கதாகும். இந்த திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக ஏற்க மறுத்தார். இந்த நிலையில் மீண்டும் அதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க வழிவகுக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் கையொப்பமிட நெருக்கடி கொடுக்கிறது மத்திய பா.ஜனதா அரசு.

தமிழ்நாடு ஒருபோதும் இதற்கு பணியாது. தமிழ்நாட்டு மாணவர்களும் இதனை ஏற்கமாட்டார்கள். கடும் போராட்டங்களை மாணவர்களிடம் திணிக்க மத்திய அரசு முயலக் கூடாது. இல்லையெனில், அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சந்தடி சாக்கில் கந்தக பொடி தூவ நினைக்கிறதா மத்திய பா.ஜனதா அரசு? தமிழ்நாடு பொங்கி எழுவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com