ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா?

சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா?
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், அகரஎலத்தூர், தேனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டாக்டர்கள் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அடிக்கடி உயிரிழப்புகள்

மேலும் இங்கு அடிக்கடி டாக்டர்கள் வராததால் அந்த பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதனால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

24 மணிநேரமும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 24 மணிநேரமும் டாக்டர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com