‘தடுப்பூசி இயக்கத்தை திருவிழா என்று கூறுவதா?' ப.சிதம்பரம் கண்டனம்

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
‘தடுப்பூசி இயக்கத்தை திருவிழா என்று கூறுவதா?' ப.சிதம்பரம் கண்டனம்
Published on

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி இயக்கத்தை 'உத்சவ்' (திருவிழா) என்று அரசு, அழைக்க விரும்பும்போது ஒருவர் என்ன கூறுகிறார்? கற்பனையாக கூட எந்த அளவிலும் இது ஒரு திருவிழாவாக இருக்க முடியாது. தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வாக ரீதியாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அரசு, சொல்லாட்சி மற்றும் மிகைப்படுத்தி கூறுவதன் மூலம் அதன் மிகப்பெரிய தோல்வியை மூடிமறைக்கிறது. சர்வதேச அளவில் தடுப்பூசி போடுவதையும், தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் தான் முதலில் வலியுறுத்தினோம். தடுப்பூசி என்பது நடைபெறும் ஒரு இயக்கமாக இருக்கவேண்டும்.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கவேண்டும். மேலும் அவற்றின் உற்பத்தி அல்லது இறக்குமதியை அனுமதிக்கவேண்டும். நம்மிடம் இரண்டு தடுப்பூசிகள் உள்ளது. ஆனால் அவை 138 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com