ஜெம் வீரமணி வீட்டின் பின்புறம் சடலமா? – போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை

சிறுமியின் உடல் அந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக கைதான ஓட்டுநர் பாலா என்பவர் வாக்குமூலம் அளித்துளார்.
ஜெம் வீரமணி வீட்டின் பின்புறம் சடலமா? – போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை
ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீடு
Published on: 

சென்னை,

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணியின் ராயப்பேட்டை வீட்டின் பின்புறம் சடலம் புதைக்கப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று தீவிரமாகத் தோண்டி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்டி) அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ராயப்பேட்டை வீட்டின் பின்புறத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும், அந்த சிறுமியின் உடல் அந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக கைதான ஓட்டுநர் பாலா என்பவர் வாக்குமூலம் அளித்துளார்.

ஜேசிபி உதவியுடன் 10 அடி ஆழத்திற்கு சோதனை

இந்த தகவலைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் போலீசார் இன்று (சனிக்கிழமை) ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டிற்கு ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் விரைந்தனர். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் சுமார் 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சோதனை நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சடலம் எதுவும் மீட்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் சோதனை முடிந்த பிறகே வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X