

மன்னார்குடி
த.வெ.க.வில் இணைவதற்கு நெருக்கடியா? என்பதற்கு மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னார்குடி சுற்றுவட்ட சாலைக்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ.46 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. மன்னார்குடியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். தற்போது வேலை இல்லா மல் சிரமப்படும் விவசாய தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினேன்.
இதை கவனமாக கேட்டுக்கொண்ட முதல்-அமைச்சர், திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவை அனுப்பி இங்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் படும் துயரங்களை போக்க நடவடிக்கை எடுப்போம் என உத்த ரவாதம் அளித்துள்ளார். அதேபோல் தி.மு.க.வும் ஒரு குழுவை அனுப்பி இருப்பதை வரவேற்கிறோம்.
கடந்த மே மாதம் 12-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பங்கு பெற்றேன். அன்று மதியமே அ.ம.மு.க.வில் இருந்து என்னை விலக்கி விட்டார்கள். 13-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவாக நான் கை தூக்கினேன். அதன்பிறகு சட்டசபையில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்தேன்.
அதனால் தான் மன்னார்குடி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டுவர முடிந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் தான் நிறைய திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.
த.வெ.க.வில் இணைவீர்களா? என கேட்கிறார்கள். அதற்கான சூழ்நிலை வரும்போது உங்களிடம் கூறிவிட்டுத்தான் இணைவேன். அதனால் எந்தவித நெருக்கடியும் எனக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.