தர்ப்பணம் செய்ய கட்டணமா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக, மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற கார்ப்பரேட் மனப்பான்மை மூலம் இந்த விடியா தி.மு.க. அரசு ஒரு மிகத் தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.

எனவே, இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com