40 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுமா? - சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்

வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
40 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுமா? - சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்
Published on

சென்னை,

சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளும் இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை கடந்தால், ஸ்பீட் ரேடார் கன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தெடர்ந்து, இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது தெடர்பாக பேக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் விளக்க கடிதம் பதிவிட்டுள்ளது.

அதில், ஆய்வு செய்வதற்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அபராதம் விதிக்கப்படாது. நாட்டின் பிற பெருநகரங்களுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப வேக கட்டுப்பாடு விவகாரத்தில் முடிவெடுக்கப்படும். வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தற்போதைக்கு ரேடார் கன் வாகனங்களின் வேகம் குறித்த டேட்டா எடுப்பதற்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி முடிவு வரும் வரை இந்த ரேடார் கன் மூலம் அபராதம் விதிக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com