பா.ஜ.க.வில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையே இடைவெளியா? - வானதி சீனிவாசன் பதில்

தி.மு.க.வை அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பா.ஜ.க.வில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையே இடைவெளியா? - வானதி சீனிவாசன் பதில்
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி எடப்பள்ளி பகுதியில் உள்ள சித்தகிரி ஶ்ரீ சாய் பாபா கோவிலில் நடைபெற்ற சண்டி ஹோமதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.க.வில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “இடைவெளி எல்லாம் எதுவும் இல்லை. இப்போது இங்கே இடைவெளி இல்லாமல் ஒற்றுமையாக அமர்ந்திருப்பதுபோல் எப்போதும் நன்றாகவே இருக்கிறோம். உட்காரும் இடத்திலும் இடைவெளி இல்லை, மனதிலும் இடைவெளி இல்லை.

ஆனால் இடைவெளியை உருவாக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் வாயிலாக சில வேலைகளை செய்கிறார்கள். அது எதுவும் நிறைவேறாது. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், நன்றாக இருக்கிறோம், தி.மு.க.வை அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com