பாஜக - திமுக இடையே ரகசிய உறவா? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை இந்துக்களின் உணர்வாக பார்க்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாஜக - திமுக இடையே ரகசிய உறவா? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் பாக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார். எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆட்சியைப் பார்க்காமல் ரீல்ஸ் போட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சரி செய்யப்பட வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நிலைப்பாடு. மாணிக்கம் தாகூர் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என்று சொல்கிறார்கள்.

கொள்கை ரீதியாக மேகதாதுவை எவ்வாறு எதிர்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்கிறார்கள். அது உருவாவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது ஆரம்பித்தவுடன் எந்த அளவுக்கு மக்களுக்கு பலன் தரும் என்று பார்ப்பீர்கள்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்சினையாக பார்க்காமல் இந்துக்களின் உணர்வாக பார்க்க வேண்டும். பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ரகசிய உறவு என அமைச்சர் நிர்மல் குமார் கூறிவருகிறார். எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. நிர்மல்குமார் முதலில் மின் வெட்டை சரி செய்ய வேண்டும். அவர் யாருடன் ரகசிய உறவு வைத்து, மின்வெட்டு நடக்கிறது. கோப்புகள் காணாமல் போகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com